நான் மிகவும் வெட்கப்படுகிறேன், வேதனைப் படுகிறேன். இதுபோன்ற ஒரு பிரதமரை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.
இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.
அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்தநிலையில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி ‘‘மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடியப்போகிறது, மே 2-ம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார்’’ என பேசினார்.
மம்தா பானர்ஜி இதற்கு பதிலளித்துள்ளார். டம் டம் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு அண்மையில் சென்று வந்தார். இப்போது அங்கு வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. அவர் எங்கு சென்றாலும் இப்படி தான் நடக்கிறது. வங்கதேசத்திற்கு சென்று தான் வங்க மக்களுக்கு ஆதரவானவர் என காட்டுகிறார்.
நான் மிகவும் வெட்கப்படுகிறேன், வேதனைப் படுகிறேன். இதுபோன்ற ஒரு பிரதமரை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. எல்லை மீறி பேசுகிறார். நான் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாகவே செயல்பட்டு வருகிறேன். மேற்குவங்க மக்களுக்கு நான் என்ன செய்யவில்லை.
ஒன்றை மட்டும் தான் செய்யவில்லை. பாஜகவை விரட்டியடிக்கவில்லை. இப்போது அந்த பணியையும் செய்கிறேன். பாஜக வீழ்ந்தால் தேசம் தப்பி பிழைக்கும். மேற்குவங்கத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுகின்றனர். அவர்களிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
8 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago