மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது மற்றொரு முஸ்லிமை கட்டியணைத்து பிரதமர் நரேந்தர மோடி வாழ்த்தியதும் சர்ச்சையாகி விட்டது. பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் ’பைக் ஆம்புலன்ஸ் தாதா’ என்றழைக்கப்படும் கரீமுல் ஹக்.
இம்மாநிலத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தின் ராஜா டாங்காவை சேர்ந்தவர் கரீமுல் ஹக். இவரது தாய் கடந்த 1995 இல் திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார்.
அப்போது, தன் தாயை மருத்துவமனை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் ஹக் தவித்துள்ளார். இதன் காரணமாக நிகழ்ந்த தாமதத்தால் ஹக்கின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால், மனமுடைந்த கரீமுல் ஹக்கின் நண்பருக்கும் தாயை போன்ற சூழல் ஏற்பட்டது. அவரை தனது இருசக்கர வாகனத்திலேயே ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றினார் ஹக்.
» கரோனாவுக்கு 3-வது தடுப்பூசி; ரஷ்யாவின் ஸ்புட்னிக்: அவசரகால பயன்பாட்டிற்கு இந்தியாவில் அனுமதி
அதில் உதித்த யோசனையின் பலனாக, தனது இருசக்கர வாகனத்தையே ஆம்புலன்ஸாகவும் மாற்றி பொதுமக்களுக்கு சேவை செய்யத் துவங்கினார். இதனால், கரீமுல் ஹக் வசிக்கும் பகுதியின் சுற்றுப்புறக் கிராமங்கள் பலனடைந்து வருகின்றன.
அப்போது முதல் அவர், ‘பைக் ஆம்புலன்ஸ் தாதா என்றழைக்கப்படுகிறார். கடந்த 2017 இல் கரீமுல் ஹக்கின் பொதுச்சேவையை பாராட்டி குடியரசு தலைவரால் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் ஐந்தாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காக கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போது, பக்டோக்ரா விமானநிலையம் வந்திறங்கியவர் கரீமுல் ஹக்கை சந்தித்ததும் சர்ச்சையாகி விட்டது.
தனக்காக விமானநிலையத்தில் காத்திருந்த கரீமுல் ஹக்கை வணங்கிய பிரதமர்மோடி அவரை கட்டியணைத்து வாழ்த்தினார். இதையும் முஸ்லிம் வாக்குகளுக்காக எதிர்கட்சிகள் விமர்சிக்கத் துவங்கி உள்ளனர்.
இதற்கு முன் பிரதமர் மோடி கடந்த வாரம், தலையில் தொப்பி அணிந்த ஒரு முஸ்லிம் இளைஞரை சந்தித்திருந்தார். தென் 24 பர்கானாவின் இந்த சந்திப்பின் வெறும் படம் மட்டும் வெளியாகி வைரலானது.
இதை தொடர்ந்து அப்படத்தினை விமர்சித்த எதிர்கட்சிகள், முஸ்லிம் வாக்குகளை கவர பிரதமர் மோடி இவ்வாறு செய்தாகக் குறிப்பிட்டிருந்தனர். இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக பல்வேறு ஊகங்களையும் ஏஐஎம் ஐஎம் தலைவரான அசததுத்தீன் ஒவைஸியும் கூறி விமர்சித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago