நாடு முழுவதும் கரோனா தடுப்பூசித் திருவிழா இன்று காலை தொடங்கியது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இன்று (ஏப் 11) முதல் ஏப்ரல் 14 வரை தகுதியுள்ளவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
மேலும், மாநில அரசுகள் இதனை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார். அதன்படி தடுப்பூசித் திருவிழா தொடங்கியது.
இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி, "நாம் இன்று தடுப்பூசித் திருவிழாவைத் தொடங்குகிறோம்.
இதன் நிமித்தமாக நாட்டு மக்கள் நான்கு விஷயங்களைக் கடைபிடிக்குமாறு நான் வலியுறுத்துகிறேன்.
1.தடுப்பூசி போட விரும்புவோருக்கு தேவையான உதவியைச் செய்யுங்கள். 2.முகக்கவசம் அணியுங்கள், மற்றவரையும் ஊக்குவிக்கவும் 3.தொற்று கண்டறியப்பட்ட பகுதியை நுண் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றுங்கள் 4. கரோனா சிகிச்சையைப் பெற பொதுமக்களுக்கு உதவியாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி பணி தொடங்கியது. நேற்று வரை சுமார் 10 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாகக் கூறுகின்றன.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,52,879 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,58,805 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 839 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 1,69,275 ஆக அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago