வயதுக் கட்டுப்பாடுகள், தடுப்பூசி வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கினால் 2 -3 மாதங்களில் டெல்லியில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட்டு விடுவோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 8,000 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறும்போது, “மத்தியிலிருந்து கரோனா தடுப்பூசிகள் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான வயது கட்டுப்பாடுகளை நீக்கினால் நாங்கள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி மையங்களைத் திறந்து 2 -3 மாதங்களில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியைச் செலுத்தி விடுவோம். டெல்லியில் 7 முதல் 10 நாட்களுக்கு கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
டெல்லியில் ஊரடங்கு கிடையாது. ஆனால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கரோனா மூன்றாம் அலை காரணமாக டெல்லியில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்வதற்கு டெல்லி மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago