டெல்லியில் கடந்த 2012, டிசம்பர் 16-ல் மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியும் கொடூரமாக தாக்கப்பட்டும் இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் பிறகு டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
நிர்பயா சம்பவத்துக்குப் பின் டெல்லியில் அரசுப் பேருந்துகள் அனைத்திலும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தி கண்காணிக்க மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால் இதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் டெல்லி போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை இடையே இன்றுவரை கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனால் அந்த உத்தரவு இன்னும் செயல்படுத்தப்படாத நிலை உள்ளது. மேலும் டெல்லி போக்குவரத்து துறை சார்பில் 1000 பேருந்துகளில் இரவு நேர பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்ட ஹோம் கார்டுகளும் பல மாதங்களாக பணியில் இருப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
பெண்களின் பாதுகாப்பு கருதி, குறிப்பாக இரவில் வீடு திரும்பும் பெண்களின் பாதுகாப்புக்காக பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட உள்ளதாக, டெல்லியில் 2-வது முறையாக பதவியேற்ற ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை இந்தப் படையினர் நியமிக்கப்படவில்லை. இதற்கு, மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையிலான மோதலே காரணமாகக் கூறப்படுகிறது.
டெல்லியின் சுற்றுப்புறங்களில் உள்ள பல மெட்ரோ நிலையங் களில் இரவில் ஆள்நடமாட்டம் குறைவாக உள்ளதால் தனியாக வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதுபோன்ற காரணங்களால் நிர்பயா சம்பவத்துக்கு பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 300 சதவீதம் அதிகரித்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012-ல் பதிவான பாலியல் பலாத்கார குற்றங்கள் எண்ணிக்கை 706 ஆக இருந்தது. இது இந்த ஆண்டு (டிசம்பர் 15 வரை) 2053 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் 2012-ல் 727 ஆக இருந்த பிற பாலியல் வழக்குகள் தற்போது 5,161 ஆக உயர்ந்துள்ளது.
என்றாலும் வழக்குகள் உயர்வுக்கு டெல்லி காவல்துறை கூறும் காரணம் வேறாக உள்ளது. “முன்பு போல் இல்லாமல் அனைத்து புகார்களையும் பொருத்தமான பிரிவுகளில் பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தைரியமாக புகார் அளிக்க முன்வரும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது” என்கின்றனர்.
சிறார் குற்றங்கள் அதிகரிப்பு
இதற்கிடையே டெல்லியில் சிறார்கள் செய்யும் குற்றங்களும் 10 ஆண்டுகளில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த தகவல் சில தினங்களுக்கு முன் மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பர்த்திபாய் சவுத்ரி அளித்த பதிலில் தெரியவந்தது. ஹரிபாய் தனது பதிலில், “நாட்டின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 10 ஆண்டுகளில் சிறார்கள் செய்யும் குற்றங்களின் எண்ணிக்கை 50.6 சதவீதம் உயர்ந்துள்ளது. 2005-ல் சிறார்களின் குற்றங்கள் 25,601 ஆக இருந்தது. இது 2014-ல் 38,586 ஆக உயர்ந்துள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago