மகாராஷ்டிராவில் தட்டுப்பாடு: 17 லட்சம் டோஸ் தடுப்பு மருந்தை அனுப்ப மத்திய அரசு முடிவு

By செய்திப்பிரிவு

நாட்டிலேயே அதிக அளவில் கரோனா பரவல் காணப்படும் மாநிலமான மகாராஷ்டிராவுக்கு 17 லட்சம் தடுப்பு மருந்துகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் அதிகரிக்க தொடங்கிய கரோனா பரவல், தற்போது உச்சத்தை எட்டி வருகிறது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,26,789 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, தினசரி கரோனா தொற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் வைரஸ் பரவல் அதிகம் காணப்படுகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 59,907 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே, மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கரோனாபரவலுக்கு ஏற்ப, போதுமான அளவு தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என அம்மாநில அரசுகுற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், மகாராஷ்டிராவுக்கு 17 லட்சம்கரோனா தடுப்பூசிகளை வழங்கமத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவை விரைவில் அம்மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோபே கூறுகையில், “மகாராஷ்டிராவுக்கு 17 லட்சம்தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டிருப்பது மகிழ்ச்சி. அதே சமயத்தில், கரோனா பரவலில் மகாராஷ்டிராவை விட குறைவான பாதிப்புகளை சந்தித்து வரும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்டமாநிலங்களுக்கு தலா 30 லட்சம்முதல் 40 லட்சம் தடுப்பு மருந்துகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால், வைரஸ் பரவல்அதிகமாக உள்ள மகாராஷ்டிராவில் தொடர்ந்து வலியுறுத்தினால் மட்டுமே கரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன. இதுபோன்று பாரபட்சம் காட்டுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்