தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு தாவிய 2 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள்

By என். மகேஷ்குமார்

தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சிக்கு (டிஆர்எஸ்) சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் அணி மாறியுள்ளனர்.

புதிய தெலங்கானா மாநிலம் உருவானது முதலாகவே டிஆர்எஸ் கட்சிதான் கடந்த 2 தேர்தலிலும் ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து கே. சந்திரசேகர ராவ் முதல்வராக பதவிவகித்து வருகிறார்.

இதனிடையே, சமீபத்தில் நடந்த துப்பாக்கா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும், ஹைதராபாத் மாநகராட்சி தேர் தலிலும் பாஜக முன்னிலை பெற்று மாநிலத்தின் பலம் பொருந்திய கட்சிகளில் ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியான இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2018-ம்ஆண்டு நடந்த தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 119 தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டுமே சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கைப்பற்றியது. சத்துபள்ளி, அஷ்வராவ் பேட்டை ஆகிய இரு தொகுதிகளிலும் வெங்கட வீரய்யா மற்றும் நாகேஸ்வரராவ் அக்கட்சி சார்பில் வெற்றி பெற்றனர்.

சந்திரபாபு நாயுடுக்கு பின்னடைவு

இந்த சூழலில், இவர்கள் இருவரும் தெலுங்கு தேசம் கட்சியைக் கலைத்துவிட்டு ஆளும்கட்சியில் இணைந்து விடுகிறோம் என கூறியதோடு, இதற்கான கடிதத்தையும் சபாநாயகர் போச்சாரம் ஸ்ரீநிவாச ரெட்டியிடம் தற்போது கொடுத்துஉள்ளனர்.

இதன் காரணமாக, தெலங்கா னாவில் தெலுங்கு தேசம் என்ற கட்சியே காணாமல் போய்விட்ட சூழல் உருவாகியிருக்கிறது.இது சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்