மத்திய பிரதேச அரசு நாளை மாலை 6 மணி முதல் திங்கள் காலை 6 மணிவரை இரண்டு நாட்கள் நகரங்களில் முழுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
கரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகின்றன. இதனைத் தவிர பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லி, பஞ்சாப் மாநிலங்களிலும் கரோனாவை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மத்திய பிரதேச அரசு நாளை மாலை 6 மணி முதல் திங்கள் காலை 6 மணிவரை இரண்டு நாட்கள் நகரங்களில் முழுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை மத்திய பிரதேச அரசு ஏற்கெனவே அறிவித்தது. இந்த 3 முக்கிய நகரங்களிலும், மறு அறிவிப்பு வரும் வரை எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் முழு ஊரடங்கு என்பதால் சாலைகளில் வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இந்தநிலையில் மத்திய பிரதேசத்தில உள்ள அனைத்து நகரங்களிலும் இரண்டு நாள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago