பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை போட்டுக்கொண்டார்.
37 நாட்களுக்குப் பின்னர் இன்று அவர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
முதல் தவணை தடுப்பூசி செலுத்திய புதுச்சேரியைச் சேர்ந்த செவிலி நிவேதா அவருடைய கைகளைப் பிடித்துக் கொள்ள செவிலி நிஷா சர்மா 2ம் டோஸ் தடுபூசியை செலுத்தினார். இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
தடுப்பூசி செலுத்தியது குறித்து, நிஷா சர்மா, நான் தான் பிரதமருக்கு இன்று இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தினேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்று கூறினார். நிஷா பஞ்சாப் மாநிலம் சங்க்ரூரைச் சேர்ந்தவர்.
முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நிவேதா, நான் இன்று பிரதமரை சந்திக்க இன்னொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிரதமரை சந்தித்ததிலும் அவருக்கு இரண்டாவது தவணை ஊசி செலுத்த உதவியதிலும் எனக்குப் பெருமகிழ்ச்சி. பிரதமர் எங்களிடம் நலம் விசாரித்தார். நாங்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம் என்று அவர் கூறினார். நிவேதா புதுச்சேரியைச் சேர்ந்தவர்.
பிரதமர் மோடி உள்நாட்டுத் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் முதல் தவணை ஊசியைக் கடந்த மார்ச் 1ம் தேதி போட்டுக் கொண்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago