அதிகரிக்கும் கரோனா; மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லியிலும் இரவு ஊரடங்கு: இன்று இரவு முதல் அமல்

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லியிலும் கரோனாவை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை மக்கள் நட மாட்டத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

கரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகின்றன. இதனைத் தவிர பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லியிலும் கரோனாவை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை மக்கள் நட மாட்டத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.

அதேசமயம் அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. முன்களப் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் இயங்க தடையில்லை என தெரிவிக்கப்படுகிறது. இ்நத இரவு ஊடரங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஏப்ரல் 30-ம் தேதி முதல் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தும் தேவையில்லை என முதல்வர் கேஜ்ரிவால் கூறியிருந்தார். இந்த நிலையில் இரவு ஊரடங்கு மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. திங்களன்று கரோனா பாதிப்பு 3,548 ஆக உயர்ந்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்