அசோகா பல்கலைக்கழகத்தில் நடந்த துயரம்

By குர்சரண் தாஸ்

அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பேராசிரியரும் அரசின் கடுமையான விமர்சகருமான பிரதாப் மேத்தா கடந்த மார்ச் 16-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடந்த போர்என வர்ணித்தன மீடியாக்கள். ஆனால் உண்மையில் அது மிகவும் துயரமான விஷயம். ஒருவர் அதிகாரத்துக்கு எதிராகஉண்மையான வெளிச்சம் போட்டுக் காட்டியவர். மற்றொருவர் சித்தாந்த ரீதியாக சிறந்த உலகை உருவாக்க நினைத்தவர். இருவருமே தங்கள் வேலையை சிறப்பாகச் செய்தவர்கள். ஆனால் முடிவு துயரமானதுதான் வேதனை.

முதல் கதாநாயகன் ஆசிஷ் தவான். உலகத் தரத்தில், லாப நோக்கில்லாத, பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகையில் பயிலும் வகையில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கும் கனவுடன் வந்தவர். கொல்கத்தாவில் வணிக குடும்பத்தில் பிறந்தவர். செயின்ட் சேவியர் பள்ளியில்பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, யேல் பல்கலையில் கல்வி உதவித்தொகையுடன் படிக்கச் சென்றார். அடுத்ததாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற பின், முதலீட்டுத் துறையில் சாதனை படைத்தார். தனது 30-வதுவயதில் இந்தியா திரும்பிய தவான், கிறிஸ் கேப்பிடல் என்ற துணிகர முதலீட்டுநிறுவனத்தை தொடங்கினார். அப்போதுதான் அவரை முதல்முதலாக சந்தித்தேன். தனது நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. உச்சத்தில் இருந்தபோது அங்கிருந்து வெளியேறினார் தவான். கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பல கோடிகளை முதலீடு செய்து அசோகா பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார்.

நமது கதையின் மற்றொரு கதாநாயகன் பிரதாப் மேத்தா. ஜோத்பூரில் ஜெயின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். சிம்லாவின் செயின்ட் எட்வர்டிலும் ஜெய்ப்பூரின் செயின்ட் சேவியரிலும் படிப்பை முடித்துவிட்டு வெளிநாடுசென்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படிப்பையும் பிரின்ஸ்டனில் அரசியல் பிரிவில் பிஎச்.டியும்முடித்தார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார்.

`இந்தியா அன்பவுண்ட்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்புவிருந்தினராக வந்தபோது முதன்முறையாக அவரை சந்தித்தேன். அதன் பிறகுஅவர் இந்தியா திரும்பி, பாலிசி ரிசர்ச்என்ற ஆய்வு நிறுவனத்தை தொடங்கினார். இதுபோககட்டுரைகள் எழுதி தனக்கென தனி மரியாதையை பெற்றார்.

இதற்கிடையில், அசோகா கல்வியில்சிறப்பான அடிப்படையை அமைக்கத் தொடங்கியிருந்தது. அங்கு உரையாற்ற சென்றபோது, அதன் வளர்ச்சியைப் பார்த்து பிரமித்தேன். அதன் நிறுவனர்களில் ஒருவராக ஆவதென்று முடிவெடுத்தேன். 2017-ல் அசோகா நிறுவனம், பிரதாப் மேத்தாவை துணைவேந்தராக வரும்படி அழைப்பு விடுத்தது. சரியான முடிவு என நினைத்தேன். ஆனால். பிரச்சினைகள் ஆரம்பித்தது.

அரசுக்கு எதிரான மேத்தாவின் கருத்துக்கள் அசோகா பல்கலைக்கழகத்துக்கு கவலையை தரத் தொடங்கின. ஆனால், மேத்தா விஷயத்தில் தலையிடதவான் மறுத்துவிட்டார். ஒருநாள் என்னுடைய ஆலோசனையை கேட்டார்கள். `மேத்தா வழக்கம்போல் எழுதட்டும்... ஆனால் அவருடைய பெயருக்கு கீழ் அசோகா பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்துவதை தவிர்க்கட்டும்..’ எனக் கூறினேன். கடந்த 2019-ம் ஆண்டில் துணை வேந்தர் பதவியை ராஜினாமா செய்த மேத்தா, தொடர்ந்து அங்கு பேராசிரியராக வேலை பார்த்தார்.

அதற்கு அடுத்த நாளே, மிகச் சிறந்த பொருளாதார அறிஞரான அர்விந்த் சுப்பிரமணியம், அசோகாவால் கல்வி சுதந்திரத்தை காப்பாற்ற முடியாது எனக் காரணம் கூறி ராஜினாமா செய்தார். மேத்தாவுக்கு ஆதரவாக அசோகாவின் 90 பேராசிரியர்கள், அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர். ஹார்வர்டு, யேல், கொலம்பியா, லண்டன் பொருளாதார கல்வி மையம், எம்ஐடி என 150-க்கும் மேற்பட்ட கல்வி அமைப்புகள் அசோகா பல்கலைக்கழகத்தின் கருத்து சுதந்தரம் குறித்து கேள்வி எழுப்பின. மாணவர்கள் 2 நாள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மேத்தா ஏன் ராஜினாமா செய்தார் என யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப் பில்லை. அரசுத் தரப்பில் அவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. அசோகா பல்கலைக்கழகத்தின் 150 கொடையாளிகளில் பெரும்பாலானோர், மோடியையும் அவரின் அரசையும் கடுமையாக விமர்சித்த மேத்தாவின் கட்டுரைகளால் காயப்பட்டுப் போயிருந்தார்கள். இதனால் பல்கலைக்கழகத் துக்கு வரும் நிதியுதவி குறைந்தால், கல்வி உதவித் தொகை வழங்குவது குறையுமே.. கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டுமே.. ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாதே.. என பல்கலைக் கழகமும் கவலையில் இருந்தது. எந்த சூழலிலும் மேத்தாவை ராஜினாமா செய்யும்படியோ எழுதுவதைநிறுத்தும் படியோ யாரும் கேட்கவில்லை. ஆனால் மேத்தாவே கொஞ்சம்கொஞ்சமாக தான் ஒரு அரசியல் சுமையாக மாறிக் கொண்டிருக்கிறோமோ எனக் கருதி தனது பதவியை ராஜினாமா செய்தார். தவானுக்கு ஒரு பக்கம் வருத்தம்... மறுபக்கம் நிம்மதி.

இதில் உண்மையான துயரம் என்ன வென்றால்... இரண்டு நல்ல மனிதர் கள்.. இருவருமே கடமையில் கண்ணானவர்கள்.. ஆனால், வேறுபட்ட விசுவாசத்தால் பிணைக்கப்பட்டு, அருமையான கல்வி நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டார்கள். அசோகா பல்கலைக்கழகம் பாதிக்கப்பட்டு, சர்வதேச கல்வி அரங்கில் புகழ்குன்றிவிட்டது. இதனால் எதிர்காலத்தில் திறமையான சர்வதேச கல்வியாளர்களை பணியில் அமர்த்த முடியாது. ஆனால், இந்தியா சர்வதேசத் தரத்தில்கல்வித் தரத்தை உருவாக்க வேண்டிய நேரத்தில் இது மிகப் பெரிய பின்னடைவுதான்.

ஒரே ஆறுதலான விஷயம்.. இப்படிநடப்பது இது ஒன்றும் முதன் முறையல்ல என்பதுதான். ஹார்வர்டு, யேல்பல்கலைக்கழகங்களும் ஆரம்பிக்கப்பட்டபோது, இதே போன்ற சவால்களை சந்தித்தவைதான். புதிய நிறுவனங்களுக்கு இதுபோன்ற சோதனைகள் ஏற்படுவது சர்வ சாதாரண விஷயம்தான். அலைமோதும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், நிறுவனத்தை புதிய பாதையில் கொண்டு செல்வதற்கான வழியை அவர்கள் தேட வேண்டும். அக்னி பரீட்சையை தாண்டிவிட்டது அசோகா. மீண்டும் உயிர்த்தெழும் என உறுதியாக நம்புகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்