பிஹாரில் கரோனா பாதுகாப்பு எடுக்கவில்லை என கோச்சிங் சென்டரை மூடவந்த அரசு அதிகாரிகள் மீது மாணவர்கள் தாக்குதல்

By ஆர்.ஷபிமுன்னா

பிஹாரில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என ஒரு தனியார் கோச்சிங் சென்டரை மூட உத்தரவிடப்பட்டது. இந்த நடவடிக்கையை அமலாக்க வந்த அரசு அதிகாரிகள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.

நாட்டின் பல மாநிலங்களில் கரோனா வைரஸ் மீண்டும் உருமாறிய நிலையில் பரவத் துவங்கி உள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் உள்ள மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கத் துவங்கி உள்ளனர்.

இதில், நீண்ட இடைவெளிக்கு பின் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளை மீண்டும் மூட உத்தரவிடப்பட்டுகின்றன. இந்தவகையில், பிஹாரின் ரோஹதாஸ் மாவட்ட சாசாராமின் நூற்றுக்கணக்கான தனியார் கோச்சிங் சென்டர்களையும் ஏப்ரல் 11 வரை மூட அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இதை ஏற்று மூடமுன்வராத சில கோச்சிங் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க இன்று காலை அதன் ரோஹதாஸ் மாவட்ட அதிகாரிகள் நேரில் சென்றிருந்தனர். அப்போது அவற்றில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்று கூடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் அரசு அதிகாரிகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததுடன், அவர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் வன்முறை வெடித்து, அப்பகுதியில் கலவரச்சூழல் உருவானது.

தொடர்ந்து அம்மாணவர்களில் ஒரு பகுதியினர் ரோஹதாஸ் மாவட்ட அலுவலக வளாகத்திலும் புகுந்து கற்களை வீசி சேதப்படுத்தினர். இதில், வழக்கு பதிவு செய்த சாசாராம் காவல்துறை 9 மாணவர்களை பிடித்து விசாரணை செய்து வருகிறது.

இது குறித்து கலவரம் நடத்திய மாணவர்கள் தரப்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கடந்த வருடம் தேர்தலின் பெயரில் ஆயிரக்கணக்கானவர்களை சமூகவிலகல் இன்றி சேர்த்து அரசியல்வாதிகள் கூட்டம் நடத்தினர்.

இதேபோன்ற கூட்டங்கள் இன்றும் நகரின் சந்தைகளில் தொடர்கிறது. இதை முதலில் தடுக்காமல் தொடர்ந்து மாணவர்கள் மீதே குறிவைப்பது கோபத்தை மூட்டுகிறது.’ எனத் தெரிவித்தனர்.

இக்கலவரத்தினால், ஒரு ஆய்வாளர் உள்ளிட்ட ஆறு போலீஸார் காயம் அடைந்தனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதன்முறையாக நடைபெற்ற இச்சம்பவம் பிஹாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்