அயோத்தியில் நாகா சாது அடித்துக் கொலை: நிலத்தகராறு காரணமா?

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ஒரு நாகா சாது இன்று அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் நிலத்தகராறு காரணம் எனக் கருதப்படுகிறது.

தெய்வீக நகராமான அயோத்தியின் ஸ்ரீராமஜென்ம பூமி கோயிலுக்கு அருகிலுள்ளது ஹனுமர் கோயில் மடம். இதன் நிர்வாகத்திற்குட்பட்ட சரண்படுகா கோயிலின் மடத்தின் பொறுப்பாளராக இருப்பவர் கன்னைய்யா தாஸ் (45).

நாகா சாதுவான இவர் அக்கோயிலின் கோசலையில் இன்று காலை அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடைந்துள்ளார். இவரது தலையில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரிந்தது.

தகவலறிந்த ஹனுமர்கிரி மடக் காவல்நிலையத்தினர் விரைந்து வந்து கன்னையா தாஸ் உடல் கிடந்த கோயிலில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொலைக்கானக் காரணம் கண்டுபிடிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அயோத்தி நகர எஸ்பி விஜய் பால்சிங், கன்னையா தாஸின் உடல் உடற்கூறு பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தார். இதன் பின்னணியில் நிலத்தகராறு இருக்கும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சாதுவான கன்னைய்யா தாஸுக்கு சொந்தமான வீடு பிரச்சனையில் உள்ளது. இதை தனது என உரிமை கோரிய வழக்கு ஏற்கெனவே அயோத்தி காவல் நிலையத்தில் பதிவாகி உள்ளது.

எனவே, அந்த நிலப்பிரச்சனை சம்மந்தப்பட்ட இருவரை பிடித்து அயோத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் கொலையாளிகள் கைதாவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சம்பவம் மீதான தகவல் அயோத்தியில் பரவி அங்குள்ள நாகா சாதுக்கள் பலரும் காவல் நிலையத்தை

முற்றுகையிட்டுள்ளனர். கொலைகாரர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் எனவும் காவல்நிலையத்தினரை வலியுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்