மீண்டும் வங்கப் பிரிவினை?-  பாஜக மீது மம்தா பானர்ஜி சரமாரி புகார்

By செய்திப்பிரிவு

வங்கத்தை மீண்டும் பிளக்க பாஜக முயலுகிறது. மதத்தால், மொழியால், கலாச்சாரத்தால் வங்கத்தை பிரிக்க சதி நடக்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற்றது. 2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்றது. இன்னமும் 6 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பிஹார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.

இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன.

இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் 24 வடக்கு பர்கானா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

‘‘வங்கத்தை மீண்டும் பிளக்க பாஜக முயலுகிறது. மதத்தால், மொழியால், கலாச்சாரத்தால் வங்கத்தை பிரிக்க சதி நடக்கிறது. மீ்ண்டும் வங்கப் பிரிவினை நடப்பதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இதற்கு வங்க மக்கள் துணை போய் விடாதீர்கள். மேற்குவங்க மாநிலத்தில் வசிக்கும் சிறுபான்மை சமூக மக்கள் தங்கள் வாக்குகள் பிரிவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்