7.3 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி: இந்தியா சாதனை

By செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் ஒருபுறம் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவிட்- 19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் 7.3 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்குத் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது.

இன்று காலை 7 மணி வரை, 11,53,614 முகாம்களில்‌ 7,30,54,295 பயனாளிகளுக்குக் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

77-வது நாளான நேற்று (ஏப்ரல் 02, 2021) நாடு முழுவதும் 30,93,795 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்திஸ்கர், டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில் அன்றாட கோவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 81.42 சதவீதம் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 89,129 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 47,913 பேரும், கர்நாடகாவில் 4,991 பேரும், சத்தீஸ்கரில் 4,174 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 6,58,909 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 5.32 சதவீதமாகும்.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,15,69,241 ஆக (93.36%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 44,202 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 714 பேர் உயிரிழந்துள்ளனர்.

அன்றாட புதிய பாதிப்புகளும் உயிரிழப்புகளும் கடந்த இரண்டு வாரங்களில் அதிகரித்துவரும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கூடுதல் கவனத்துடன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறைத் தலைமை இயக்குநர்கள், சுகாதாரச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்