நாடு முழுவதும் புதிதாக 89,129 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுபோலவே கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 714 பேர் பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அதன்படி நேற்று ஒரே நாளில் 89,129 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,23,92,260 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இந்தளவு அதிக எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
» ஊரடங்கு இல்லை என்று சொல்லமாட்டேன்; இன்னும் ஓரிரு நாட்களில் முக்கிய அறிவிப்பு வரும்: உத்தவ் தாக்கரே
» நான் பிரதமரானால் வளர்ச்சியைக் காட்டிலும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் தருவேன்: ராகுல் காந்தி
குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 44,202 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,15,69,241 ஆக உள்ளது.
ஒரே நாளில் 714 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். மொத்த பாதிப்பு 1,64,110 ஆக உள்ளது.
நாடுமுழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,58,909 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஜனவரி 16-ம் தேதி நாட்டில் கரோனா தடுப்பூசி பணி தொடங்கியது. இதுவரை 7,30,54,295 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago