நான் பிரதமரானால் வளர்ச்சியைக் காட்டிலும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் தருவேன்: ராகுல் காந்தி

By பிடிஐ

நான் பிரதமரானால் வளர்ச்சியைக் காட்டிலும் வேலைவாய்ப்புக்கே முக்கியத்துவம் கொடுப்பேன் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறினார்.

அமெரிக்காவின் ஹார்வர்டு கென்னடி பள்ளியின் பேராசிரியரும் அந்நாட்டு முன்னாள் வெளியுறவுச் செயலருமான நிக்கோலஸ் பர்ன்ஸிடம் நடந்த கலந்துரையாடலின்போது ராகுல் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த கலந்துரையாடலின் விவரம் பின்வருமாறு:

நான் பிரதமரானால் வளர்ச்சியைக் காட்டிலும் வேலைவாய்ப்புக்கே முக்கியத்துவம் கொடுப்பேன். எனக்கு 9% பொருளாதார வளர்ச்சியில் பெரிய ஆர்வமில்லை. அந்தப் பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக வேலைவாய்ப்பை உருவாக்காவிட்டால் வளர்ச்சி அர்த்தமற்றதாகிவிடும். வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குதலுக்கும் இடையே தொடர்பு இருக்க வேண்டும். இதைத்தான் சீனர்கள் செய்கின்றனர். எந்த ஒரு சீனத் தலைவரும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தனக்கு பிரச்சினை இருக்குமென்று கூறமாட்டார்.

அதனாலேயே சொல்கிறேன், நான் பிரதமரானால் எனது கவனம் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே மையப்புள்ளியாகக் கொண்டிருப்பதைக் காட்டிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதையே மையமாகக் கொண்டிருக்கும்.

இந்தியாவில் தற்போது அரசியல் அமைப்புகள் முற்றிலுமாக கைப்பற்றப்பட்டுள்ளன. நியாயமான நடுநிலையாக இருக்க வேண்டிய அமைப்புகள் இப்போது அப்படியில்லை.

தேர்தலை எதிர்கொள்ள அரசியலமைப்புகள் சுதந்திரமாக இருக்க வேண்டும், நீதித்துறை அனைவரையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும், ஓரளவுக்கு சுதந்திரமாக ஊடகங்கள் இயங்க வேண்டும், அரசியல் கட்சிகள் அனைத்துமே சமநிலையில் நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.

அசாமில் பாஜக வேட்பாளர் ஒருவர் தனது காரில் வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டு செல்கிறார். இதைப் பற்றி எந்த ஊடகமும் உரக்கப் பேசவில்லை.

தேர்தலில் காங்கிரஸ் மட்டும் வெற்றியை தவறவிடுவதில்லை. பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளுமே தோற்கின்றன. இவற்றைத் தவிர்க்க சுதந்திரமான அரசிலமைப்புகள் வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்