2-ம் கட்டத் தேர்தல்- மாலை 3:30 மணி நிலவரம்: மேற்குவங்கத்தில் 71.07% அசாமில் 63.03%

By செய்திப்பிரிவு

அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் 2-ம் கட்டத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 3.30 மணி நிலவரப்படி அசாமில் 63.03 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 71.07 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அசாம், மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ம் தேதி நடை பெற்றது. அசாமில் 47 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள் என மொத்தம் 77 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்தித்தன. இவ்விரு மாநிலங்களிலும் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அசாமில் 39 தொகுதிகளிலும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளும் மாநிலத்தின் பஷ்சிம் மெதினிபூர், கிழக்கு மெதினிபூர், தெற்கு 24 பர்கானாஸ், பாங்குரா ஆகிய 4 மாவட்டங்களில் உள்ளன.

30 தொகுதிகளிலும் 19 பெண்கள் உட்பட மொத்தம் 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மிக முக்கிய வேட்பாளரான முதல்வர் மம்தா, நந்திகிராமில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த சுவேந்து அதிகாரி, பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

ஒரு காலத்தில் முதல்வர் மம்தாவுக்கு நெருக்கமாக இருந்த இவர், கடந்த டிசம்பரில் மம்தாவின் திரிணமூல் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். தவிர இடதுசாரி வேட்பாளர் மீனாட்சி முகர்ஜியும் இங்கு களத்தில் உள்ளார்.

அசாமில் தேர்தல் நடைபெறும் 39 தொகுதிகளில் 12 தொகுதிகள் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கான தனித்தொகுதிகள். 39 தொகுதிகளிலும் 26 பெண்கள் உட்பட மொத்தம் 345 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். இவர்களில் 5 பேர் அமைச்சர்கள், ஒருவர் துணை சபாநாயகர் ஆவார்.

இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பான தேர்தல் நடைபெற்று வருகிறது. மாலை 3.30 மணி நிலவரப்படி அசாமில் 63.03 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 71.07 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்