அசாமில் காலை 11 மணி நிலவரப்படி 21.71 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் காலை 11.30 மணி நிலவரப்படி 37.42 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அசாம், மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ம் தேதி நடை பெற்றது. அசாமில் 47 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள் என மொத்தம் 77 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்தித்தன. இவ்விரு மாநிலங்களிலும் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அசாமில் 39 தொகுதிகளிலும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளும் மாநிலத்தின் பஷ்சிம் மெதினிபூர், கிழக்கு மெதினிபூர், தெற்கு 24 பர்கானாஸ், பாங்குரா ஆகிய 4 மாவட்டங்களில் உள்ளன. 30 தொகுதிகளில் 8 தொகுதிகள் எஸ்சி சமூகத்தினருக்கான தனித் தொகுதிகள் ஆகும்.
30 தொகுதிகளிலும் 19 பெண்கள் உட்பட மொத்தம் 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மிக முக்கிய வேட்பாளரான முதல்வர் மம்தா, நந்திகிராமில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த சுவேந்து அதிகாரி, பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
» மீண்டும் 70 ஆயிரத்தை கடந்தது தினசரி கரோனா தொற்று: 6 மாதங்களில் இல்லாத பாதிப்பு
» இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி
ஒரு காலத்தில் முதல்வர் மம்தாவுக்கு நெருக்கமாக இருந்த இவர், கடந்த டிசம்பரில் மம்தாவின் திரிணமூல் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். தவிர இடதுசாரி வேட்பாளர் மீனாட்சி முகர்ஜியும் இங்கு களத்தில் உள்ளார்.
அசாமில் தேர்தல் நடைபெறும் 39 தொகுதிகளில் 12 தொகுதிகள் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கான தனித்தொகுதிகள். 39 தொகுதிகளிலும் 26 பெண்கள் உட்பட மொத்தம் 345 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். இவர்களில் 5 பேர் அமைச்சர்கள், ஒருவர் துணை சபாநாயகர் ஆவார்.
இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பான தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நேர நிலவரப்படி அசாமில் 21.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்குவங்கத்தில் காலை 11.30 மணி நிலவரப்படி 37.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago