மகாராஷ்டிராவில் குறையும் கரோனா பரவல்: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உயர்வு

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த கரோனா பாதிப்பு 27 ஆயிரமாக குறைந்துள்ளது. அதேசமயம் கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து இயல்பு நிலையும் திரும்பியது. இந்தநிலையில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,480 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,21,49,335ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 37,028 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 1,14,34,301 பேர் குணமடைந்தனர்.

கரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 354பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,62,468 ஆக அதிகரிதுள்ளது.

மகாராஷ்ராவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த கரோனா பாதிப்பு 40 ஆயிரம் எண்ணிக்கையை கடந்தது. இதையடுத்து மகாராஷ்டிராவில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்திட காலவரையற்ற இரவு ஊரடங்கை அமல்படுத்தி மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த கரோனா பாதிப்பு இன்று 27918 ஆயிரமாக குறைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் கரோனா தொற்று நிலவரம் குறைந்து வருகிறது. அதேசமயம் சத்தீஸ்கரில் கரோனா தொற்று கடுமையாக உயர்ந்துள்ளது. கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

தினசரி கரோனா பாதிப்பு: மார்ச் 23-ம் தேதி நிலவரம்

மகாராஷ்டிரா: 40414

கர்நாடகா: 3,082

பஞ்சாப்: 2870

மத்தியப் பிரதேசம்: 2276

குஜராத்: 2270

கேரளா: 2216

தமிழ்நாடு: 2194

சத்தீஸ்கர்: 2153

தினசரி கரோனா பாதிப்பு: இன்றைய நிலவரம்


மகாராஷ்டிரா: 27918

சத்தீஸ்கர்: 3108

கர்நாடகா: 2975

கேரளா: 2389

தமிழ்நாடு: 2342

குஜராத்: 2220

பஞ்சாப்: 2188

மத்தியப் பிரதேசம்: 2173

இந்த 8 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த கரோனா பரவலில் 85 சதவீதமாக உள்ளது.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்