டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு நாளை மறுதினம் இதய அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
75 வயதாகும் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவுமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
» கரோனா தொற்று 62,714 ஆக உயர்வு: பலி எண்ணிக்கையும் அதிகரிப்பு
» தீவிரமாக பரவும் கரோனா; கட்டுப்படுத்த ஐந்து முனை திட்டம்: மத்திய அரசு நடவடிக்கை
இந்தநிலையில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று (2021 மார்ச் 27) மாற்றப்பட்டார். பரிசோதனைகளுக்கு பின்னர் பைபாஸ் சிகிச்சையை செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தினர்.
செவ்வாய் (30 மார்ச்) காலை அவருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago