‘‘திரிணமூல் காங்கிரஸுக்கு தோல்வி பயம் வந்து விட்டது’’ - திலிப் கோஷ் விமர்சனம்

By செய்திப்பிரிவு

திரிணமூல் காங்கிரஸுக்கு தோல்வி பயம் வந்து விட்டது, அதனால் தான் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அக்கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர் என மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் பதில் கூறியுள்ளார்.

அசாமில் 47 தொகுதிகளும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளும் என 77 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் இன்று தேர்தலை சந்திக்கும் 30 தொகுதிகளும் ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜங்கல் மெஹல் பிராந்தியத்தில் உள்ளன.

இங்கு திரிணமூல் காங்கிரஸ், பாஜக சார்பில் தலா 29 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 18 பேர், காங்கிரஸ் சார்பில் 6 பேர், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 4 பேர், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் 2 பேர் உட்பட மொத்தம் 191 பேர் களத்தில் உள்ளனர்.

மேற்குவங்கத்திலும் ஜார்கிராம், மேற்கு மித்னாபூர் ஆகிய மாவட்டங்களில் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் அதிகஅளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். இந்தநிலையில் முதல்கட்டத் தேர்தலில் பெருமளவு முறைகேடு நடைபெறுவதாக திரிணமூல் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களித்தால் தாமரைச் சின்னத்தில் வாக்களித்தாக அடையாளச் சீட்டில் பதிவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் அது பாஜவின் தாமரைச் சின்னத்தில் பதிவாகும் வகையில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி முதல்கட்டமாக தேர்தல் ஆணையம் தெரிவித்த வாக்குப்பதிவு விவரங்களை திடீரென மாற்றி அறிவித்து விட்டதாகவும் புகார் கூறியுள்ளது.

ஏதோ பெரிய அளவில் முறைகேடு நடப்பதால் உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லயில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.

இதுகுறித்து மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியதாவது:

‘‘மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் முதல்கட்டத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக புகார்களை தெரிவிக்கின்றனர்.

மம்தா பானர்ஜி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். அதனால் தான் தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் புகார் அளிக்கிறது. மக்கள் ஆதரவு இல்லாத திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் இதுபோன்ற புகார்களை அளிக்கின்றனர். ஆனால் மக்கள் நம்பத் தயாராக இல்லை.’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்