இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 62,258 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 291ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,19,08,910ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 30,386 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 1,12,95,023 பேர் குணமடைந்தனர்.
» தேர்தல் கருத்துக்கணிப்புக்கு ஏப்ரல் 29-ம் தேதி வரை தடை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் இருவரை ஆக்ரா, கோரக்பூரில் பணி அமர்த்திய உ.பி. முதல்வர் யோகி
கரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 291பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,61,240 ஆக அதிகரிதுள்ளது.
கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,52,647 ஆக உள்ளது. இதுவரை 5,81,09,773பேர் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago