அசாம் சட்டப்பேரவை தேர்தலில் மூங்கில்களும், பிரம்புகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றை மரங்கள் பட்டியலில் அகற்றிய பாஜகவிற்கு அவை, மீண்டும் ஆட்சி அமைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடர்ந்த வனம் மற்றும் வனவிலங்குகள் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக இருப்பது அசாம். இங்கு இந்தியாவிலேயே அதிகமாக வளரும் மூங்கில்கள், புல்வகைகளாகக் கருதப்படுகின்றன. நெடு, நெடுவென வளரும்இவை செடிகளாகவும், மரங்களாகவும் இரண்டு வகை தோற்றங்களில் காணப்படுகின்றன.
இவற்றில் செடிகள் போன்று வளர்வதை மூங்கில்கள் எனவும், மரங்களை போல் தடித்து வளர்வதை பிரம்புகள் எனவும் கூறுவது உண்டு. அசாம்வாசிகளுக்கும், அங்குள்ள வனவிலங்குகளுக்கும் அவர்களது அன்றாட வாழ்க்கையில் இவை பேருதவி புரிகின்றன.
அடர்ந்த காடுகளின் வெளிப்பகுதி மற்றும் நதிக்கரைகளில் இந்த மூங்கில் மற்றும் பிரம்புகள் வளர்வது அதிகம். இம்மாநிலத்தில் பெய்யும் அதிக மழையின் காரணமாக பிரம்புகள், மரங்களுக்கு இணையாகவும் வளர்வது உண்டு. இதனால், அவற்றை பார்க்கும் போது இவை செடிகளா? மரங்களா? என்ற சந்தேகம் எழும்புவது வழக்கம்.
குறிப்பாக இவை பூடானின் எல்லையில் அமைந்த அசாம்பகுதிகளில் மிக அதிகமாக வளர்கின்றன. இதனால், மூங்கில்களையும், பிரம்புகளையும் ஆதாரமாக வைத்து அப்பகுதிவாசிகள் அதிகப் பலனை அடைந்து வருகின்றனர். இந்த இருவகைகளும் கூடைகள், வீடுகளின் திரைச்சீலைகள் மற்றும் நாற்காலிகள், பங்களாக்களின் வரவேற்பறை சோபாக்கள்செய்ய எனப் பல வகைகளில் பயன்படுகின்றன. இவற்றில் மூங்கில் செடிகளில் ஒருவகை, வனங்களில் வாழும் யானைகளுக்கும் முக்கியத் தீனியாக உள்ளது. ஓங்கி வளரும் பிரம்புகளுக்கு இடையிலான மறைவு, வனவிலங்குகளுக்கும் ஒரு பாதுகாப்பான மறைவிடமாகவும் அமைந்து விடுகிறது.
பிரம்புகளும், மூங்கில்களும் பல ஆண்டுகளாக மரங்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இதனால், அவற்றை வெட்டிப்பயன்படுத்துவதில் அசாம்வாசிகளுக்கு பல்வேறு வகை சிரமங்கள் இருந்துள்ளன. இப்பிரச்சினை பல ஆண்டுகளாக மத்திய, மாநிலங்களில் ஆட்சி செய்த அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் கவனிக்கப்படாமல் இருந்துள்ளன.
கடந்த 2014 மக்களவை தேர்தலில் வென்று முதன்முறையாக பிரதமரான நரேந்திர மோடியின் கவனத்திற்கு இப்பிரச்சினை சென்றுள்ளது. இதன் மீது ஆராய்ந்து உரிய நடவடிக்கைக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கடந்த 2017-ல் மூங்கில்களையும், பிரம்புகளையும் மரங்களின் பட்டி யலில் இருந்து மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டது. இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் பலனை 2017-ம் ஆண்டிற்கு பின் அசாம்வாசிகளும், அதன் வனவிலங்குகளும் பெறுகின்றன.
இதற்கு ஈடானப் பலன் அரசியல் ரீதியாகவும் பாஜகவிற்கு கிடைத்தது. இங்கு பல ஆண்டுகளாக காங்கிரஸிடம் இருந்த ஆட்சியை பாஜக கடந்த தேர்தலில் பறிக்க இந்த மூங்கில் அரசியலும் ஒரு காரணமானது. இதனால், அசாம்வாசிகளின் பெரும்பாலான வாக்குகள் பாஜகவிற்கு கிடைத்தன.
அசாமில் முதன்முறையாக ஆட்சி அமைத்த பாஜக தற்போது மீண்டும் ஆட்சி அமைக்க முயல்கிறது. இங்கு முதல் கட்டங்களாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார மேடைகளில் மூங்கில் மற்றும் பிரம்புகள் மீதான அரசியலும் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
2017-ம் ஆண்டிற்கு முன்பு வரை
அசாம்வாசிகள் இடையே இந்த மூங்கில்களும், பிரம்புகளும் அவர்களது கலாச்சாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய இடம் வகுக்கின்றன. 2017-ம் ஆண்டிற்கு முன்பு வரைஇவற்றையோ அல்லது அதனால் செய்த பொருட்களையோ வேற்று மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதிலும் பல சிரமங்கள் நிலவின.
தற்போது இவ்விரண்டும் மரங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், அதற்கான தடைகள் பெரும்பாலும் நீங்கி விட்டன. எனவே பிரம்பு, மூங்கில்களின் நிலையிலான பெரும் மாற்றத்திற்கானப் பலன், பாஜகவிற்கு இந்த தேர்தலிலும் கிடைக்கும் என எதிர் நோக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago