திருமலையில் ஏழுமலையானின் கோயிலுக்கு அருகே உள்ள தெப்பக்குளமானது, பல புண்ணிய தீர்த்தங்களின் சங்கமாக திகழ்கிறது. மேலும் இங்கு சக்கர ஸ்நானம் நடைபெறுவதால் புண்ணிய தெப்பக்குளமாக பக்தர்கள் எண்ணி புனித நீராடி வருகின்றனர்.
கரோனா தொற்றால் இந்த தெப்பக்குளத்தில் தற்போதுபக்தர்கள் நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருடாந்திர தெப்போற்சவம் நேற்று தொடங்கியது. ஆயிரம் ஆண்டு களுக்கும் மேலாக இந்த தெப்பத்திருவிழா நடைபெற்று வருவதாக கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. நேற்று மாலை நடைபெற்ற தெப்பத் தோற்சவத்தில் லட்சுமணர், அனுமர், சீதை சமேதமாய் ராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இரண்டாம் நாளான இன்று மாலை பாமா, ருக்மணி சமேதமாய்கிருஷ்ணரின் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. அடுத்த 3 நாட்களும் தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பரின் தெப்பல் உற்சவம் நடைபெறும் என்பது குறிப்பிடத் தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago