திருப்பதி எம்.பி. தொகுதி இடைத்தேர்தல்- முன்னாள் மத்திய அமைச்சர் வேட்பு மனு தாக்கல்

By என்.மகேஷ்குமார்

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருப்பதி எம்.பி. துர்கா பிரசாத் ராவ் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பரில் காலமானார். இதையடுத்து காலியான திருப்பதி மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 17-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இத்தொகுதியில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் பனபாக லட்சுமி நேற்று நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களுமான அச்சம் நாயுடு, சோமிரெட்டி சந்திரமோகன் ரெட்டி, யனமல ராமகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, நெல்லூர் தெலுங்கு தேசம் கட்சி அலு வலகத்தில் உள்ள என்.டி.ஆர். சிலைக்கு பனபாக லட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இத் தொகுதிக்கான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் குருமூர்த்தி என்பவர் அறிவிக்கப் பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்