இந்தியாவில்  உருமாறிய மாறுபாடுகளுடன் கூடிய கரோனா வைரஸ்: மரபியலுக்கான இந்திய கரோனா கூட்டமைப்பு பரிசோதனையில் உறுதி

By செய்திப்பிரிவு

இந்தியாவில் உருமாறிய மாறுபாடுகளுடன் கூடிய கரோனா வைரஸ் பரவியுள்ளது மரபியலுக்கான இந்திய கரோனா கூட்டமைப்பு பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரபியலுக்கான இந்திய கரோனா கூட்டமைப்பின் கீழ் (INSACOG) 10 தேசிய பரிசோதனைக் கூடங்கள் அடங்கிய குழுவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி அமைத்தது.

அப்போது முதல், நாட்டின் பல பகுதிகளில் இருந்து அனுப்பப்படும் கோவிட்-19 வைரஸ் மாதிரிகளில் வேறுபாடுகள் உள்ளதா என ‘இன்சாகாக்’ ஆய்வு செய்து வருகிறது. வைரஸின் இந்த மரபியல் மாறுபாடுகள் இயற்கையானது. இது அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனுப்பிய 10,784 கோவிட் வைரஸ் மாதிரிகளில், 771 மாதிரிகள் மரபியல் வேறுபாடுகளுடன் இருந்தது கண்டறியப்பட்டது.

இவற்றில் 736 மாதிரிகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ். 34 மாதிரிகள் தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகையைச் சேர்ந்தது. ஒரே ஒரு மாதிரி, பிரேசிலில் கண்டறிப்பட்ட கரோனா வைரஸ் மாதிரி. இந்த மாறுபட்ட வைரஸ் மாதிரிகள், 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டன.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் எடுக்கப்படும் மாதிரிகளும், இன்சாகாக் கூட்டமைப்பில் உள்ள 10 பரிசோதனைக் கூடங்களில் மரபியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

மகாராஷ்ராவில் இருந்து அனுப்பப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, அவை 2020 டிசம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டன. இதில் மாறுபாடுகள் அதிகரித்து இருந்தது தெரியவந்தது.

இந்த மாறுபாடுகளுடன் கூடிய வைரஸ், பாதிப்பை அதிகரிக்கச் செய்தன. 15 முதல் 20 சதவீத மாதிரிகளில் இந்த மாறுபாடுகள் இருந்தன. இவை பழைய மாதிரிகளுடன் ஒத்துப் போகவில்லை. கரோனா பாதிப்பு ஏற்பட்டவருடன், நெருங்கி பழகியவர்களுக்கும், தேசிய கரோனா சிகிச்சை நெறிமுறைப்படி பரிசோதனை அதிகரிக்கப்பட்டு, பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

கேரளாவின் 14 மாவட்டங்களில் இருந்து வந்த 2032 கரோனா வைரஸ் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 11 மாவட்டங்களைச் சேர்ந்த 123 மாதிரிகள் N440K வகையைச் சேர்ந்தவை. இதே வகை வைரஸ், ஆந்திராவில் இருந்து சேகரிக்கப்பட்ட 33 சதவீத மாதிரிகளிலும், தெலங்கானாவில் இருந்து சேகரிக்கப்பட்ட 53 மாதிரிகளிலும் முன்பு கண்டறியப்பட்டது.

இந்த வகை வைரஸ், இங்கிலாந்து, டென்மார்க், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் காணப்பட்டது. நிலைமையை மேலும் ஆய்வு செய்ய, மரபியல் மற்றும் தொற்று நோயியல் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

2 days ago

மேலும்