தினசரி கோவிட் புதிய பாதிப்புகள் : 80% மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் 7,33,597 முகாம்களில் 4,50,65,998 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் 46,951 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,535 பேரும், பஞ்சாபில் 2,644 பேரும், கேரளாவில் 1,875 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது 3,34,646 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 2.87 சதவீதமாகும்.
மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் அன்றாட கோவிட் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 80.5% பதிவாகியுள்ளது.
» கேரளாவில் பாஜக வேட்பாளர்கள் 3 பேர் வேட்பு மனு நிராகரிப்பை எதிர்த்து மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
இந்தியாவில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியைக் கடந்துள்ளது.
இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 7,33,597 முகாம்களில் 4,50,65,998 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 77,86,205 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 48,81,954 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 80,95,711 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 26,09,742 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 37,21,455 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 1,79,70,931 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,51,468 ஆக (95.75%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 21,180 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 212 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago