‘‘வன்முறை வெறியாட்டத்தில் இருந்து மேற்கு வங்கத்தை காப்பாற்றுங்கள்’’ - அமித் ஷா கூட்டத்தில் சுவேந்து அதிகாரியின் தந்தை ஆவேசம்

By செய்திப்பிரிவு

வன்முறை வெறியாட்டத்தில் இருந்து மேற்கு வங்காளத்தை காப்பாற்றுங்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பாஜகாவில் அண்மையில் இணைந்த சுவேந்து அதிகாரியின் தந்தையும், திரிணமூல் காங்கிரஸ் எம்பியுமான சிஸிர் அதிகாரி பேசினார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், இரண்டாம்கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 3 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதை அடிப்படையாகக் கொண்டு மேற்கு வங்கத்தில் திரிணமூல் ஆட்சியை அகற்ற பாஜக கடும் பிரயத்தனம் செய்து வருகிறது.

இதில் திரிணமூல் காங்கிரஸ் அரசில் கேபினட் அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி பாஜகவில் சேர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். அவரது தந்தை சிஸர் அதிகாரி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக உள்ளார். அவரும் பாஜகவில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் ஈகராவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சிக்கு ஆதரவு திரட்டினார். இந்தக் கூட்டத்தில் சிஸிர் அதிகாரி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:

வன்முறை வெறியாட்டத்தில் இருந்து மேற்கு வங்காளத்தை காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். மாநிலத்தில் மிக மோசமான சூழல் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் தார்மீக உரிமையை இழந்து விட்டார். மேற்குவங்கத்தை பாஜகாவல் மட்டுமே காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்