கோவிட்-19 தடுப்பூசி: எண்ணிக்கை 4 கோடியை நெருங்குகிறது

By செய்திப்பிரிவு

கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை (3,93,39,817) நெருங்கியுள்ளது.

சில மாநிலங்களில் தினசரி கோவிட்-19 பாதிப்பு அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39,726 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.63 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 25,833 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் 2,369 பேருக்கும், கேரளாவில் 1,899 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

8 மாநிலங்களில் தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாநிலங்களுடன் மத்திய அரசு, தொடர்ந்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

கோவிட் பரிசோதனைகளை அதிகரித்து, தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களைக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் உத்திகளை பின்பற்றும்படி மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபரிடம், முதல் 72 மணி நேரத்தில் தொடர்பு கொண்ட நபர்கள் குறைந்தது 20 பேரையாவது கண்டறிந்து தனிமைப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் வகைகளைக் கண்டறிய, மரபணு சோதனைக்கு மாதிரிகளை அனுப்பும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் 10 பரிசோதனைக் கூடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் கூட்டத்தை குறைக்கும்படியும், கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்படியும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தடுப்பூசி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவ உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அனுப்பியது.

நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 2.71 (2,71,282) லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 18,918 பேர் குறைந்துள்ளனர்.

இன்று காலை 7 மணி வரை, கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை (3,93,39,817) நெருங்கியுள்ளது.

62வது நாளான நேற்று, 22 லட்சம் பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,10,83,679-ஐ எட்டியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்