1990-களில் ராமயண தொடர் பிரபலமாக இருந்தபோது அந்த தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் இன்று பாஜகவில் இணைந்தார்.
ராமானந்த் சாகர் தயாரிப்பில் உருவான ராமாயணம் தொடர், 1987-ம்ஆண்டில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் ஒளிபரப்பானது. இதில் இந்தி நடிகர் அருண் கோவில் ராமர் வேடத்திலும் நடிகை தீபிகா சீதையாகவும் குத்துச் சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர்.
அப்போதே, நாடு முழுவதும் கோடிக் கணக்கானோர் இந்தத் தொடரை பார்த்தனர். இப்போது, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வீட்டில் இருக்கும் மக்கள் பார்க்க வசதியாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி ராமாயணம் தொடரை 33 ஆண்டுகளுக்குப் பின் கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் மறு ஒளிபரப்பு செய்கிறது.
ராமாயணம் தொடர் முதலில் ஒளிபரப்பானபோது பெற்ற வரவேற்பை போலவே இப்போதும் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் இத்தொடரை ரசித்து பார்த்து வருகின்றனர். குறிப்பாக கரோனா காலத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி ஒளிபரப்பான பகுதியை மொத்தம் 7.7 கோடி பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம் உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற உலக சாதனையை ராமாயணம் தொடர் படைத்துள்ளது. இத்தகவலை தூர்தர்ஷன் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
1990-களில் ராமயண தொடர் பிரபலமாக இருந்தபோது சீதையாக நடித்த தீபிகா பாஜகவில் இணைந்து அக்கட்சியின் எம்.பி.யாக இருந்தார். அதேசமயம் ராமராக நடித்த அருண் கோவில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1990-களில் நடந்த தேர்தலில் காங்கிரஸூக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
அதன் பிறகு அவர் பெரிய அளவில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்தநிலையில் அவர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் முறைப்படி பாஜகவில் அவர் இணைந்தார். கரோனா காலத்தில் ராமாயணம் பெரிய அளவில் மக்களிடம் சென்றடைந்துள்ள நிலையில் மேற்குவங்கம் உள்ள மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அருண் கோவில் பிரச்சாரம் செய்யக்கூடும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago