சித்தூர் மாநகராட்சியின் முதல் மேயர் அனுராதா மற்றும் அவரது கணவர் கட்டாரி மோகன் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் பர்தா அணிந்து வந்த சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அனு ராதா உயிரிழந்தார். படுகாய மடைந்த மோகன் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தம்பதியி னருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
கொலையாளிகளில் 2 பேர் போலீஸ் நிலையத்திலும், ஒருவர் சித்தூர் நீதிமன்றத்திலும் சரண் அடைந்தனர். அவர்களின் விவரம் வெளியிடப்படவில்லை. இந்த இரட்டை கொலையில் மேயரின் உறவினரான சிண்ட்டு என்கிற சந்திரசேகருக்கு தொடர்பு இருப்ப தாக தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், நேற்று காலையில் சித்தூருக்கு மோகனின் உடல் கொண்டு வரப்பட்டது.
சித்தூர் மாநகராட்சி வளாகத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக இருவரது உடல்களும் வைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பொதுமக்கள், தெலுங்கு தேசம் கட்சியினர், உற வினர்கள், நண்பர்கள் என நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
சித்தூரில் பந்த்
இந்த இரட்டைக் கொலையை கண்டித்து சித்தூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நேற்று பந்த் நடைபெற்றது. இதனால் காலை முதல் மாலை வரை அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அலுவலகங்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேற்று காலை விமானம் மூலம் ரேணிகுண்டா வந்தார். பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களில் மழையினால் சேதமடைந்த பகுதி களை பார்வையிட்டார். அதன் பின்னர் சித்தூர் மாநகராட்சிக்கு வந்து மேயர் அனுராதா, அவரது கணவர் கட்டாரி மோகனின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி னார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடையவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். எங்கள் ஆட்சியில் ரவுடிகள், குண்டர்கள் தலைதூக்க ஒரு போதும் அனுமதிக்கப்பட மாட்டாது” என்றார். பின்னர் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து விமானம் மூலம் விஜயவாடா சென்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
48 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago