கோவிட்  தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 3.5 கோடியாக உயர்வு: ஒரே நாளில் 21 லட்சம் பேருக்கு பயன்

By செய்திப்பிரிவு

கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3.5 கோடியைக் கடந்ததுள்ளது. நேற்று ஒரே நாளில் 21 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 28,903 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 71.10 சதவீதம் பேர், மேற்கண்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் மட்டும் 17,864 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 1,970 பேருக்கும், பஞ்சாப்பில் 1,463 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட் சிசிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 2.34 லட்சமாக உள்ளது. இன்று காலை 7 மணி வரை 3.5 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர், 1,15,89,444 பேர்.

60வது நாளான நேற்று 21 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு (21,17,104) தடுப்பூசி போடப்பட்டது. இந்தியாவில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 1,10,45,284-ஐ தொட்டது. இது 96.56 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 188 பேர் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்