அனைத்து இந்தியர்களுக்கும் நாயகன்; வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான்: பிரதமர் மோடி புகழாரம்

By செய்திப்பிரிவு

வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்தநாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

“மனித உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் பாடுபட்ட அருந்தலைவர் வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்தநாளான இன்று அவருக்கு உளம் நிறைந்த புகழஞ்சலியை உரித்தாக்குகின்றேன்.

அவர் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு நாயகனாகத் திகழ்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க #MujibBorsho விழாவுக்காக இந்த மாத இறுதியில் வங்கதேசத்துக்கு செல்வதை என்னுடைய கவுரவமாகக் கருதுகிறேன்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE