புவனேஸ்வர், பூரி, விசாகப்பட்டினம்- சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் புவனேஸ்வர், பூரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

புவனேஸ்வர் - சென்னைசென்ட்ரல் இடையே வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் பண்டிகைக்கால அதிவிரைவு சிறப்பு ரயில் (02839)ஏப்.1-ம் தேதி முதல் ஜுன் 24-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வர் சிறப்பு ரயில் (02840) ஏப்.2-ம் தேதி முதல் ஜுன் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

புவனேஸ்வர் - புதுச்சேரி வாராந்திர அதிவிரைவு பண்டிகைக்கால ரயில் (02898) ஏப்.6-ம் தேதி முதல் ஜுன் 29-ம் தேதி வரையும், மறுமார்க்கத்தில், புதுச்சேரி -புவனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில் (02897) ஏப்.7-ம்தேதி முதல் ஜுன் 30-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

புவனேஸ்வர் - ராமேஸ்வரம் வாராந்திர அதிவிரைவு பண்டிகைக்கால சிறப்பு ரயில் (08496) ஏப்.2-ம் தேதி முதல் ஜுன் 25-ம் தேதி வரையும், மறுமார்க்கத்தில், ராமேஸ்வரம் - புவனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில் (08495) ஏப்.4 முதல் ஜுன் 27-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பூரி - சென்னை சென்ட்ரல் வாராந்திர அதிவிரைவு பண்டிகைக்கால சிறப்பு ரயில் (02859) ஏப்.4-ம் தேதி முதல் ஜுன் 27-ம் தேதி வரையும், மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் - பூரி வாராந்திர சிறப்பு ரயில் (02860) ஏப்.5 முதல் ஜுன் 28-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

விசாகப்பட்டினம் - சென்னை சென்ட்ரல் வாராந்திர அதிவிரைவுபண்டிகைக்கால சிறப்பு ரயில்(02869) ஏப்.5 முதல் ஜுன் 28-ம்தேதி வரையும், மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் - விசாகப்பட்டினம் வாராந்திர சிறப்பு ரயில் (02870) ஏப்.6 முதல் ஜுன் 29 வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது

இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்