லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது அதனை பலரும் கடுமையாக விமர்சித்தார்கள், ஆனால் முழு ஊரடங்கு அமல்படுத்தவில்லையென்றால் விபரீத விளைவுகள் தான் ஏற்பட்டிருக்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.
இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்தநிலையில் மக்களவையில் இன்று பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:
‘‘லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது அதனை பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால் முழு ஊரடங்கு அமல்படுத்தவில்லையென்றால் விபரீத விளைவுகள் தான் ஏற்பட்டிருக்கும். ரயில்களை முழுமையாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை பலரும் விடுத்தனர்.
ஆனால் கரோனா பரவலை கருத்தில் கொண்டு மட்டுமே இ்ந்த விஷயத்தில் முடிவெடுக்கப்படும். ரயில் சேவை தொடர்ந்து இயக்கியிருந்தால் கரோனா வைரஸ் பரவல் நாடுமுழுவதும் வேகமாக அதிகரித்து இருக்கும்.
ரயில் போக்குவரத்தை நிறுத்தியது கரோனா பரவலை தடுக்கவே. அதேசமயம் பல மாநிலங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டபோது அவர்கள் சொந்த ஊர் திரும்ப ரயில்வே முழு அளவில் ரயில்களை இயக்கியது. ரயில்கள் மட்டுமல்லாமல் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 2 கோடி இலவச உணவும், தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டுள்ளன. ’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago