ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய கங்கிரெட்டி மொரீஷியஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து நேற்று அவர் ஹைதராபாத் அழைத்து வரப்பட்டார்.
இதுகுறித்து ஆந்திர மாநில டிஜிபி ராமுடு ஹைதராபாதில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
கடப்பா மாவட்டம் மல்லம் மலடி கிராமத்தை சேர்ந்த கொல்லம் கங்கிரெட்டி, 1987-ம் ஆண் டில் கள்ளச் சாராயம் விற்று வந்தார். இதன்பின்னர் சிறிய குற்றவாளிகளை தனது கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு நாட்டு வெடிகுண்டுகளை தயாரிப்பதில் ஈடுபட்டார்.
இந்த சமயத்தில் 1987 முதல் 1989 வரை பல குற்றங்களில் ஈடுபட்டார். சில அரசியல் கொலை வழக்குகளிலும் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார். 1992-ம் ஆண்டு கடப்பாவில் முரளிமோகன் ரெட்டி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர் முக்கிய எதிரி ஆவார்.
பின்னர் 1994-ம் ஆண்டு ஹைதராபாதில் நடந்த வெடி குண்டு சம்பவத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார். இதனை தொடந்து நக்ஸலைட் கும்பலுடன் இணைந்து அவர்களுக்கு பல உதவிகள் புரிந்துள்ளார்.
2003-ம் ஆண்டு திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் காணிக்கை கொண்டு செல்லும்போது அவரது கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது. இந்த வழக்கிலும் கங்கிரெட்டி முக்கிய எதிரியாக சேர்க்கப்பட்டார். அப்போது அவரை போலீஸார் கைது செய்து திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜாமீனில் வெளியே வந்த அவர் போலி பாஸ் போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார்.
இந்நிலையில் மொரீஷியஸ் நாட்டில் கங்கிரெட்டி தனது காதலியுடன் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய உள்துறையுடன் ஆந்திர அரசு பேசி, அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்பேரில் சிஐடி போலீஸ் ஐஜி துவாரகா ரெட்டி தலைமையிலான தனிப்படை போலீஸார் மொரீஷியஸ் சென்றனர். அங்கு சர்வதேச போலீஸார் கங்கிரெட்டியை கைது செய்து ஆந்திர போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
மொரீஷியஸில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று அவர் டெல்லி அழைத்து வரப்பட்டார். பின்னர் டெல்லியில் இருந்து நேற்று மாலை அவர் விமானம் மூலம் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டார்.
கடப்பா, திருப்பதி, சித்தூர், ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் அவர் மீது போலீஸ் மற்றும் வனத்துறை தொடர்பான 28 வழக்குகள் உள்ளன. அவரை இன்று காலை ஹைதராபாதில் இருந்து கடப்பா ராஜம்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். அதைத் தொடர்ந்து அவரை காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.
விசாரணையின்போது அவருக்கு உதவிய அரசியல் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறித்த விவரம் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செம்மர கடத்தல் உட்பட பல்வேறு சட்டவிரோத செயல்கள் மூலம் இதுவரை ரூ.500 கோடிக்கு மேல் கங்கிரெட்டி சொத்து குவித்திருப்பதாக ஆந்திர போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago