பெட்ரோலியம் விலை 9.40 சதவீதம் உயர்வு:  பிப்ரவரி மொத்த விலை குறியீட்டு எண்கள் வெளியீடு

By செய்திப்பிரிவு

2021 பிப்ரவரியில் தாதுக்களின் விலைகள் 9.40 சதவீதமும், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுவின் விலைகள் 6.50 சதவீதம் உயர்ந்து இருந்தது.

2021, பிப்ரவரி மாதத்துக்கான (தற்காலிக) மொத்த விலை குறியீட்டு எண்களை தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் 2021 பிப்ரவரி மாதத்துக்கான பணவீக்கம் 4.17 சதவீதமாக (தற்காலிகம்) இருந்தது. இது கடந்தாண்டின் இதே மாதத்தில் 2.26 சதவீதமாக இருந்தது.

முதன்மைப் பொருட்கள் குழுவின் குறியீட்டு எண் 2021 பிப்ரவரி மாதத்தில் (தற்காலிகம்) 1.04 சதவீதம் உயர்ந்து 145.4 ஆக இருந்தது. இது 2021 ஜனவரி மாதத்தில் 143.9ஆக இருந்தது.

2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2021 பிப்ரவரியில் தாதுக்களின் விலைகள் 9.40 சதவீதமும், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுவின் விலைகள் 6.50 சதவீதமும், உணவுப் பொருட்களின் விலைகள் 0.51 சதவீதமும் அதிகரித்தன.

2021 பிப்ரவரியில் உணவு சாராப் பொருட்களின் விலைகள் (-0.51 சதவீதம்), 2021 ஜனவரி மாதத்தைவிட குறைவாக இருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்