மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய 5 மாநிலங்களில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில், 26,291 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 78.41 சதவீதம் பேர் மேற்கண்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 16,620 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 1,792 பேருக்கும், பஞ்சாப்பில் 1,492 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,19,262.
» ஆந்திர உள்ளாட்சி தேர்தல்: ஜெகன் மோகன் ரெட்டி கட்சி பெரும் சாதனை; ஒரு வார்டில் மட்டும் வென்ற பாஜக
மற்றொருபுறம், இந்தியாவில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கியுள்ளது. இன்று காலை 7 மணி வரை 2,99,08,038 பேர் கொவிட் தடுப்பூசி போட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 82,92,193 பேர் கோவிட் தடுப்பூசி போட்டுள்ளனர்.
58வது நாளான நேற்று 1,40,880 தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்தியாவில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,10,07,352-ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் 96.68 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 17,455 பேர் குணமடைந்துள்ளனர். 118 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago