இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள 14-வது ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார். இதற்காக அவர் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று புத்த துறவி போல் ஆடையணிந்து தலையை மொட்டை அடித்துக் கொண்டு இருக்கும் எம்.எஸ். தோனியின் புகைப்படம் வெளியானது. இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது ஒரு நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட படம் என்பது தெரியவந்தது. இதையடுத்து தோனியின் புதிய தோற்றமுள்ள புகைப்படத்தை அவரது ரசிகர்கள் இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் தற்போது இந்தப் படம் இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago