மத்திய பிரதேச மாநிலத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் போபால் மற்றும் இந்தூர் நகரங்களில் இரவு நேர ஊரடங்கு விரைவில் அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.
இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழகத்தில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான புதிய பாதிப்புகளில், 85.6 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அங்கு பிப்ரவரி 9-ம் தேதி வரை தினசரி பாதிப்பு என்பது சராசரியாக 2489 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால் பிப்ரவரி 10-ம் தேதிக்கு பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. பின்னர் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 24,882 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் போபால் மற்றும் இந்தூர் நகரங்களில் கரோனா பாதிப்பு மிக அதிகஅளவில் உள்ளது. இதனையடுத்து அந்த இரு நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு விரைவில் அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:
‘‘மகாராஷ்டிராவில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு பயணி்பபவர்கள் வழியாக கரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக போபால் மற்றும் இந்தூர் நகரங்களில் கரோனா பாதிப்பு மிக அதிகஅளவில் உள்ளது. இதனையடுத்து அந்த இரு நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு விரைவில் அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் வாகன போக்குவரத்து நிறுத்தப்படாது. கரோனா இன்னமும் நம்மை விட்டு செல்லவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முககவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம் தேவை.’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago