மம்தா பானர்ஜி கீழே தள்ளப்பட்டு கீழே விழுந்த சம்பவத்திற்கு பாஜக மீது குற்றம்சாட்டியுள்ள திரிணமூல் காங்கிரஸ், மேற்குவங்க மாநிலத்தில் தேர்தலைக்காட்டி மாநில சட்டம்- ஒழுங்க டிஜிபியை மாற்றியபோதே இதுபோன்ற விபரீதங்கள் நடக்கும் என்ற அச்சம் ஏற்பட்டதாக கூறியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், இரண்டாம்கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது.
இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கல் செய்தபின்னர் காரில் ஏற முயன்றபோது மம்தா பானர்ஜி கீழே விழுந்தார். 4 பேர் அவரை கீழே தள்ளி விட்டதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். மேலும் அப்போது காவலர்கள் யாரும் அங்கு இல்லை எனவும் கூறியிருந்தார்.
முதல்வர் மம்தாவை காரின் பின்பக்க சீட்டில் அவரது மெய்க்காவலர்களை ஏற்றி உட்காரவைக்கும் காட்சி தொலைக்காட்சிகளில் வெளியானது.
நந்திகிராம் தொகுதியில் நேற்று மம்தா தங்கவிருந்த நிலையில் திடீர் தாக்குதலால் அவர் கொல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆளுநர் தன்கர் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபஜித் பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘மே 2, ஞாயிற்றுக்கிழமை வங்க மக்களின் சக்தியைக் காணப்போகிறீர்கள். பாஜக உங்களைத் தூண்டுகிறது. தயாராய் இருங்கள்’’ என பதிவிட்டுள்ளார்.
இதுபோலவே திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜியும் பாஜகவை குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது:
மம்தா பானர்ஜியை பலவீனப்படுத்த வேண்டும், தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லவிடக்கூடாது என்ற சதி நடைபெறுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் தேர்தலைகாட்டி மாநில சட்டம்- ஒழுங்க டிஜிபியை மாற்றியபோதே இதுபோன்ற விபரீதங்கள் நடக்கும் என்ற அச்சம் ஏற்பட்டது.
அது தற்போது உறுதியாகி விட்டது. தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு டிஜிபியை மாற்றும் வழக்கமில்லை. இருந்தாலும் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் தவறான எண்ணங்களால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் இதனை செய்தவர்கள் இப்போது அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் அதற்குரிய பொறுப்பை ஏற்க வேண்டும்.’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago