நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு மீண்டும் 20 ஆயிரத்தை கடந்துள்ளது. புதிதாக 22,854 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கரோனா மரணமும் 126 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,854 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,85,561 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 18,100 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 1,09,38,146 பேர் குணமடைந்தனர்.
கரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 126பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,58,189 ஆக அதிகரிதுள்ளது.
கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,89,226 ஆக உள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago