கேரள சட்டப்பேரவைத் தேர்தல்: பினராயி விஜயன் தர்மதம் தொகுதியில் போட்டி

By ஏஎன்ஐ

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 83 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் தர்மதம் தொகுதியிலும், சுகாதார அமைச்சர் சைலஜா மட்டனூர் தொகுதியிலும், கே.டி.ஜலீல் தாவனூர் தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆட்சி அமைந்தது. முதல்வராக பினராயி விஜயன் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது.

வரும் 12-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சாதகமான கருத்துக் கணிப்பு:

கேரளாவில் மொத்தம் உள்ள140 தொகுதிகளில் 82 இடங்களில் வெற்றி பெற்று ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சியைத் தக்கவைக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 56 இடங்கள் கிடைக்கும்.

பாஜகவுக்கு 1 இடம் மட்டுமே கிடைக்கும் என டைம்ஸ் நவ் மற்றும் சிவோட்டர் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்