திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவரும் பாஜகவில் இணைந்தார். திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம் செய்து வந்த அவர் திடீரென கட்சித் தாவியுள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம்தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.
அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர், இந்தநிலையில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவரும் பாஜகவில் இணைந்தார். திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம் செய்து வந்த அவர் திடீரென கட்சித் தாவியுள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஹாபிபூர் தொகுதி வேட்பாளராக சரளா மம்மு அண்மையில் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் இன்று மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சுவேந்து அதிகாரி, முகுல் ராய் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவர் மட்டுமின்றி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய எம்எல்ஏக்கள் சோனாலி குஹா, திபெந்து பிஸ்வாஸ், ரபீந்திரநாத் பட்டாச்சார்யா, ஜாது லஹரி ஆகியோரும் இன்று பாஜகவில் இணைந்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago