அசாம் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பஹ்ருதீன் அஜ்மல் கட்சி சார்பில் 16 வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

By பிடிஐ

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் உள்ள மிகப்பெரிய கட்சியான பஹ்ருதீன் அஜ்மலின் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎப்) கட்சி முதல் கட்டமாக 16 வேட்பாளர்கள் பட்டியலை நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 27-ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 1-ம் தேதியும், 6-ம் தேதியும் அடுத்தடுத்த கட்டத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

முதல் கட்டமாக வரும் 27-ம் தேதி 47 தொதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 11 மாவட்டங்களிலிருந்து 42 தொகுதிகளும், நாகோன் மாவட்டத்திலிருந்து 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

இதில் காங்கிரஸ் தலைமையில், அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பிபிஎப் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகியவை இணைந்து கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கின்றன.

இதுவரை காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் எம்எல்ஏவாக இருக்கும் 19 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மாநில அளவில் பெரிய கட்சியான பஹ்ரூதின் அஜ்மலின் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி நேற்று நள்ளிரவு முதல் கட்ட வேட்பாளர்களாக 16 பேரின் பட்டியலை வெளியிட்டது. இதில் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் 7 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுசாமுதீன் லக்சர் (காட்லிசேரா தொகுதி), நிஜாமுதின் சவுத்ரி (அல்காபூர்), நஸ்ருல் ஹக் (துப்ரி), நிஜானுர் ரஹ்மான் (காரிபூர்), ஹபிஸ் பஷிர் அகமது (பிலாசிபாரா மேற்கு), மருத்துவர் ஹபிஸ் ரபிகுல் இஸ்லாம் (ஜானியா) ஆகியோர் புதிதாக வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இதில் கட்சியின் தலைவர் பஹ்ருதீனின் சகோதரர் சிராஜுதின் அஜ்மல் ஜமுநாமுக் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், பானி தாலுக்தார் (பாபானிபூர்), அமினுல் இஸ்லாம் (மன்காச்சர்), கரிமுதீன் பார்ஹியா (சோனை) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்