மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதிக்கு வேட்பாளர் யாரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் அறிவிக்கவில்லை.
ஆனால், முதல் கட்டத் தேர்தலுக்காகக் காங்கிரஸ் கட்சி மட்டும் 13 வேட்பாளர்களை நேற்று நள்ளிரவில் அறிவித்தது. இதில் பெரும்பாலும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 முறை எம்எல்ஏவாக இருந்தவரும், காங்கிரஸ் சட்டப்பேரவை துணைத் தலைவருமான நேபால் மகாத்தோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் புருலியா மாவட்டத்தில் பாகமுந்தி தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஆனால், பெரும் கவனத்தை ஈர்த்துள்ள புர்பா மெதினாப்பூர் மாவட்டத்தில் உள்ள, மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளர்கள் யாரையும் அறிவிக்கவில்லை. இந்தத் தொகுதியில் மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.
இந்த நந்திகிராம் தொகுதியைக் கூட்டணிக் கட்சியான அப்பாஸ் சித்திக் தலைமையிலான இந்திய மதச்சார்பற்ற முன்னணிக்கு ஒதுக்கியுள்ளதாகக் காங்கிரஸ் கூறுகிறது. நந்திகிராம் தொகுதியில் குறிப்பிடத்தகுந்த அளவு முஸ்லிம்கள் இருப்பதால் ஐஎஸ்எப் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் இரு கட்டத் தேர்தலில் ஐஎஸ்எப் கட்சி 5 இடங்களில் போட்டியிடுகிறது.
294 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட மே.வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐஎஸ்எப் கட்சிகள் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 92 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதில் வரும் 27-ம் தேதி நடக்கும் முதல் கட்டத் தேர்தல், ஏப்ரல் 1-ம் தேதி நடக்கும் 2-ம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் 13 வேட்பாளர்களின் பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 7 பேர் புதியவர்கள்.
முதல் கட்டத் தேர்தல் நடக்கும் புர்லியா தொகுதி, பாகமுந்தி தொகுதியில் மட்டும் 2016-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.
புர்லியா தொகுதியின் எம்எல்ஏ சுதீப் முகர்ஜி சமீபத்தில் பாஜகவில் இணைந்துவிட்டதால், அவருக்குப் பதிலாக காங்கிரஸ் சார்பில் பார்தா பிரதிம் பானர்ஜி போட்டியிடுகிறார்.
முதல் இருகட்டத் தேர்தலில் ஈக்ரா, நந்திகிராம், பிங்க்லா ஆகிய தொகுதிகளில் யார் போட்டியிடப் போகிறார் எனத் தெரியவில்லை, ஐஎஸ்எப் கட்சி போட்டியிடவும் வாய்ப்பு இருந்தாலும் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
முதல் இருகட்டத் தேர்தலில் மொத்தம் 60 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் இடதுசாரிகள் 38 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், ஐஎஸ்எப் கட்சி 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இதில் ஐஎஸ்எப் கட்சிக்கு மகிசாதல், சந்திரகோனா, ரகுநாத்பூர், சால்தோரா, ராய்பூர் ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி புர்லியா, பாகபான்பூர், பல்ராம்பூர், பாகமுந்தி, பாங்குரா, பிஸ்னுபூர், கோடுல்பூர், பதார்பிரதிமா, காக்விப், மோய்னா, காரக்பூர் சாதர், சாபங் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago