மக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
பிஹார் மாநிலம் பெகுசராயில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், "எனது துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் பொதுமக்களின் குறைகளுக்கு செவி கொடுப்பதில்லை என்ற புகார் என்னை அவ்வப்போது எட்டுகிறது.
அப்போது அவர்களிடம் நான், இது போன்ற சிறிய விஷயங்களுக்கு எல்லாம் பிடிஓ, எஸ்டிஎம், ஆட்சியர், கிராம பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மக்கள் பணி செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
ஒருவேளை அவர்கள் உங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் மூங்கில் தடியால் அவர்களின் தலையில் அடியுங்கள்.
» கவிஞர் வரவர ராவ் விடுதலை: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு
» அமமுக வேட்பாளர் பட்டியலில் உள்ளூர் நிர்வாகிகளுக்கே முக்கியத்துவம்?
அப்போதும் அவர்கள் அந்தப் பணியைச் செய்யாவிட்டால் பிரச்சினையை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் என் பலத்தைக் காட்டுகிறேன்" என்று கூறினார்.
அவரது பேச்சு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago