மேற்குவங்க மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சோனாலி குஹா பாஜகவில் சேரப்போவதாக அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக 294 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி் 291 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இன்று அறிவித்துவிட்டது. இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, மூன்றாவது அணியாக இடதுசாரிகள், காங்கிரஸ், மதச்சார்பற்ற முன்னணி இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. இதனால் தேர்தல் களம் சூடாகியுள்ளது. தேர்தலில் இடம் கிடைக்காததால் கட்சி மாறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
» அயோத்தி ராமர்கோயில்: நிதி திரட்டும் பணி முடிந்தது: தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் அறிவிப்பு
» வேகமெடுக்கும் கரோனா தடுப்பூசி பணி: யார் யாருக்கு?- பட்டியல் விவரம்
மேற்குவங்க மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சோனாலி குஹா பாஜகவில் சேரப்போவதாக அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
‘‘திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. என்னை மம்தா பானர்ஜி வெளியேற்றி விட்டார். முகுல் ராயிடம் பேசினேன். நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை.
அதேசமயம் பாஜகவில் பொறுப்பான பதவி கிடைக்குமா எனக் கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டுள்ளார். மம்தா தீீதி இல்லாவிட்டால் என்ன பாஜக இருக்கிறது. அந்த கட்சியில் சேருவேன்’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago