பிஹார் மாநில தேர்தல் முடிவுகளால் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் புகழுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஷானாஸ் உசைன் கருத்து கூறியுள்ளார்.
இது குறித்து ’தி இந்து’விடம் பிஹாரை சேர்ந்தவரும் பாஜகவின் தேசிய தலைவர்களுள் ஒருவருமான ஷானாவாஸ் உசைன் கூறுகையில், "பிஹாரின் தேர்தலில் பிரச்சாரம் செய்ய எங்கள் கட்சி கோரியதன் பேரில் பிரதமர் மோடி அதை செய்திருந்தார். அதில், மக்களின் வளர்ச்சிப் பணியை குறிப்பிட்டு தன் பணியை மிகவும் நிறைவாக செய்திருந்தார்.
இங்கு மெகா கூட்டணி தலைவர்கள் எழுப்பிய புகார்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார். இதன் மூலம் அவருக்கு இருக்கும் புகழுக்கு எந்த பாதிப்பும் வருவதற்கு வாய்ப்பில்லை. அவருக்கு கிடைத்துள்ள புகழுக்கு ஈடு இணை கிடையாது.
பிஹாரில் வளர்சி வெல்லும் என நாம் நினைத்தோம். ஆனால், பொதுமக்களை சாதிகளின் பெயரில் பிரிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் நிலை தெரிகிறது. ஆனால், இதிலும் எங்கள் நிலை ஒன்றும் மோசமாகி விடவில்லை. டெல்லியை போல் நான் ஒன்றும் அதிகமாக பின்னுக்கு தள்ளப்பட்டு விடவில்லை” எனத் தெரிவித்தார்.
பிஹாரின் பாகல்பூர் தொகுதியில் எம்பியாக பலமுறை வென்ற ஷானாஸ் உசைன், தேசிய ஜனநாயக முன்னணியில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். இந்தமுறை நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டவருக்கு தோல்வி ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago